சிறுமி பாலியல் பலாத்காரம் ஆணையம் நாளை விசாரணை | நாமக்கல் செய்திகள் | Dinamalar
சிறுமி பாலியல் பலாத்காரம் ஆணையம் நாளை விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
20:19

நாமக்கல்:சிறுமி பாலியல் வழக்கை, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நாளை விசாரிக்க உள்ளது.



நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த வட்டமலை குள்ளங்காடு பகுதியைச் சேர்ந்த, தறித் தொழிலாளியின், 14 வயது மகளை, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சிறுமியின் அக்கா கணவர் உட்பட, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதில், ஆணையம், இப்புகாரை, தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது.



இது தொடர்பாக, ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, விசாரணை அமர்வு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.அமர்வில், உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், நாளை குமாரபாளையம் வருகின்றனர். காலை, 11:30 மணிக்கு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் அலுவலகத்தில் விசாரணை நடக்கிறது.



'சைல்டு லைன்' நிர்வாகி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர், பாதுகாப்பு இல்லத்தின் அலுவலர், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்று, வழக்கு விசாரணை குறித்து, விளக்கம் அளிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X