தம்பதி தகராறை தடுத்தவர் கொலை | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
தம்பதி தகராறை தடுத்தவர் கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
20:26

தஞ்சாவூர்:மனைவியிடம் தகராறு செய்த தொழிலாளியை தட்டிக் கேட்ட முதியவர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.



தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருந்தவபுரத்தைச் சேர்ந்தவர் சூசைராஜ், 34; ஒரத்தநாட்டில் உள்ள வாள் பட்டறையில் தங்கி, வேலை பார்த்து வருகிறார். சூசைராஜ், நேற்று முன்தினம் இரவு, மது குடித்து வந்து, தன் மனைவி செல்வியை திட்டி அடித்துள்ளார்.அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன், 60 என்பவர், சூசைராஜிடம் வந்து, 'மனைவியை அடிப்பது தவறு' என கண்டித்துள்ளார்.



போதையில் இருந்த சூசைராஜ், ராஜேந்திரனை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சூசைராஜ், கத்தியால் ராஜேந்திரனை குத்தி கொலை செய்தார். ஒரத்தநாடு போலீசார், சூசைராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X