விடுதி மாணவர்களின் நிதி 'ஏப்பம்':தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
21:40

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் விடுதி மாணவர்களின் நிதியை மோசடி செய்ததாக, இரண்டு தலைமை ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.



நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 22 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பழங்குடியின மாணவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு மூன்று வேளை உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப் பட்டு வருகின்றன.கொரோனா காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், விடுதியில் தங்கி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு, உணவு தொகையாக தலா, 6,300, உதவி தொகை 1,000 என மொத்தம் 7,300 ரூபாய் வழங்கப்படுகிறது.



இந்நிலையில், நீலகிரி மாவட்டம், தேவாலா மற்றும் பொன்னானி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் விடுதி சமையலர்கள் வங்கி கணக்கில் வரவு வைத்து மோசடி செய்துள்ளனர்.



இதுகுறித்த புகாரின்படி, பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் பெற்றோர் பலரும், மாவட்ட கலெக்டரிடம் நேரில் புகார் மனு அளித்தனர். இதைடுத்து, தேவாலா பள்ளி தலைமையாசிரியர் பாக்கியசேனன், பொன்னானி பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட பழங்குடி நல அலுவலர் உத்தரவிட்டார்.



நீலகிரி பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம் கூறுகையில், ''தற்போது, இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ''பண மோசடியில் சம்பந்தப்பட்ட பிறர் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்தவுடன், அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X