அமராவதி அணை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி | திருப்பூர் செய்திகள் | Dinamalar
அமராவதி அணை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
21:51

உடுமலை:உடுமலை அமராவதி அணையிலிருந்து, குடிநீர் மற்றும் நிலைப்பயிர்களுக்கு உயிர்த்தண்ணீர் திறக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன காலம் முடிவடைந்த நிலையில், இரு மாவட்டங்களிலுள்ள, 16 பழைய வாய்க்கால் பாசன பகுதிகளில், 26 ஆயிரத்து, 553 ஏக்கர் நிலங்களுக்கு அமராவதி அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக, 994 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.



அதே போல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி பிரதான கால்வாய் வழியாக, 380 மில்லியன் கன அடிக்கு மிகாமல், 10 நாட்கள் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை, 6:00 மணிக்கு அமராவதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.



அமராவதி அணையில், நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 86.16 அடி நீர் மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,702 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 24 கன அடி நீர் வரத்து இருந்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X