மன்சூர் மீது 5 பிரிவுகளில் வழக்கு | சென்னை செய்திகள் | Dinamalar
மன்சூர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:19

வடபழநி:மாரடைப்பு காரணமாக, வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக், 16ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை நேரில் சந்தித்து, நலம் விசாரிக்க, நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனைக்கு வந்தார்.



அப்போது, மருத்துவமனையில் விவேக் அனுமதிக்கப்பட்டதற்கு காரணம், கொரோனா தடுப்பூசி தான் என்றார். இவரது ஆவேசமான பேச்சு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.இந்நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப்பணிக்கு எதிராக இருப்பதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோடம்பாக்கம் மண்டல அலுவலர் பூபேஷ், வடபழநி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



புகாரின் அடிப்படையில், நேற்று பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும்

தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல், பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட, ஐந்து பிரிவுகளின் கீழ், வடபழநி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X