இடத்துக்கு பட்டா வழங்க கோரிக்கை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இடத்துக்கு பட்டா வழங்க கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:31

பொள்ளாச்சி:'பல ஆண்டுகளாக வசித்து வரும் இடத்துக்கு பட்டா வழங்கி, அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும்,' என, மக்கள் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி அருகே, காளியாபுரம் காக்காகொத்திப்பாறை பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:காக்காகொத்திப்பாறையில் பல தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். இங்கு, 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மூன்று ஏக்கர் நிலம், ஆடு, மாடு மேய்க்கவும், திருவிழாக்கள் நடத்தவும் பயன்படுத்தப்பட்டது.இந்நிலையில், தனிநபர் ஒருவர், அந்த நிலம் அவருக்கு சொந்தமானது, என கூறி குடிசைகளை அகற்ற கோரி மிரட்டுகிறார். இது குறித்து, ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என ஆவணங்கள் உள்ளது. எனவே, இந்த பகுதியில் குடிசை போட்டு வாழும் குடும்பங்களுக்கு, பட்டா வழங்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X