மாற்றுப்பாதையில் செல்லும் வாகனங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:32

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், நான்கு வழிச்சாலை பணிகள் நடப்பதால், கழுகரை -- துங்காவி ரோடு தடுக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று திரும்புகின்றன.மடத்துக்குளம் அருகே கழுகரையிலிருந்து, துங்காவி செல்லும் ரோடு 8 கி.மீ., நீளம் உள்ளது. இந்த வழித்தடத்திலும், உடுமலை -- தாராபுரம் ரோட்டிலும், துங்காவி -- ஓட்டமடம் ரோட்டிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மடத்துக்குளம் வந்து திரும்ப இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.வேடபட்டிக்குச்செல்ல இது முக்கியமான பாதையாக இருந்தது. இந்நிலையில், தற்போது மடத்துக்குளம் பகுதியில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.வேடபட்டி மற்றும் கழுகரை பகுதியிலுள்ள, விளைநிலங்களுக்கு மத்தியில், இந்தப்பணிகள் நடப்பதால், இப்பகுதியிலுள்ள கிராமச்சாலைகள் பல இடங்களில் தடுக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.இதற்கு மாற்றாக வேடபட்டிக்கு செல்ல, கணியூர் ரோட்டிலுள்ள செக்கான் ஓடை அருகிலுள்ள ரோடு வழியாகவும், கே.டி. எல்., பகுதியிலுள்ள ரோடு வழியாகவும், சோழமாதேவிமேடு பகுதியிலிருந்து ஆதி திராவிடர் காலனி வழியாகவும், வேடபட்டிக்கு செல்லலாம். இதோடு,வேடபட்டி நால் ரோட்டில் இணைந்து துங்காவி, மைவாடி வழித்தடத்தில் பயணிக்கலாம்.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமடைந்துள்ளதால், பல இடங்களில் தரைத்தளம் உயர்த்துதல் மற்றும் சிறு பாலம் அமைக்க கட்டுமானப்பணிகள் நடக்கின்றன. இதனால் கிராம ரோடுகள் தடுக்கப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X