தொற்று பரவல் கட்டுப்படுத்த வெளிய சுத்தாதீங்க!ஊரடங்கு நெறிமுறை கடைபிடிங்க
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:35

பொள்ளாச்சி:''பொள்ளாச்சியில், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த, ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து தரப்பினரும் கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும்,'' என, ஆலோசனை கூட்டத்தில் சப் - கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.பொள்ளாச்சியில், கொரோனா பரவல் கட்டுப்படுத்துதல், ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். கமிஷனர் காந்திராஜ், டி.எஸ்.பி.,க்கள் சிவக்குமார், விவேகானந்தன், தாசில்தார்கள் முன்னிலை வகித்தனர். வணிக நிறுவனங்கள், மருந்துக்கடை உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.டி.எஸ்.பி., கூறுகையில், ''பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி, வடக்கிப்பாளையம் உள்ளிட்ட, எட்டு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. சோதனைச்சாவடியில், ஒரு எஸ்.ஐ., நான்கு போலீசார் வீதம் கண்காணிப்பில் ஈடுபடுவர்,'' என்றார்.சப் - கலெக்டர் கூறியதாவது:பொள்ளாச்சியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நகை கடைகளில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்; அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளில் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யவும்; சானிடைசர் வழங்கவும் ஆட்கள் நியமிக்க வேண்டும்.கூட்டத்தை குறைக்க கடைகளில் அதிகளவு 'கவுன்டர்'கள் அமைக்க வேண்டும். தற்காலிக மார்க்கெட் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அட்டக்கட்டி மற்றும் ஆழியாறு பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும்.இரவு நேர ஊரடங்கின் போது, அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். அரசு, தனியார் பஸ்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் பஸ் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வரும் லாரி டிரைவர் மற்றும் லாரி தனிமைப்படுத்த வேண்டும். திருமண விழாக்களில் குறைந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணம் நடந்தால், அழைப்பிதழ்களுடன் செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.ஞாயிறு ஊரடங்கின் போது தேவையில்லாமல் சுற்ற கூடாது. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் நடைபெறும். தியேட்டர்களில், 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்; இரவு நேர காட்சி கிடையாது.மருந்து கடைகளில் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருந்து வாங்கினால், அவரது மொபைல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை பெற்று, கடை உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும். முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். வரும், இரண்டு வாரங்கள் முக்கியமானதாகும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கண்காணிப்பு அவசியம்!அரசுத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில், சப் - கலெக்டர் கூறுகையில், ''சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, மோதிராபுரம் உள்ளிட்ட பகுதிகள்; ஆனைமலை பகுதியில் சமத்துார், ஆத்துப்பொள்ளாச்சி; கிணத்துக்கடவு, கோவில்பாளையம், தாசநாயக்கன்பாளையம், கொசவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகம் உள்ளது.வால்பாறையில், எட்டு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X