குறைந்த நாள் அறுவடைக்கு 'டிரம் ஷிடர்' கருவியில் விதைப்பு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
குறைந்த நாள் அறுவடைக்கு 'டிரம் ஷிடர்' கருவியில் விதைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:35

'டிரம் ஷிடர்' நேரடி விதைப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த, தண்டரை கிராமத்தைச் சேர்ந்த ஹரி அழகன் கூறியதாவது:கறுப்பு கவுனி, குள்ளக்கார் உள்ளிட்ட பல வித பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன்.



பெரும்பாலான பாரம்பரிய ரக நெல், ஆறு மாதங்களில், அறுவடைக்கு வரும். இதில், குள்ளகார் ரக நெல், குறைந்த நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது.குறிப்பாக, குள்ளக்கார் ரக நெல் நாற்றுவிட்டு நடவு செய்தால், 110 நாட்களில் அறுவடைக்கு வரும். நான், டிரம் ஷிடர் கருவி மூலமாக, குள்ளக்கார் நெல்லை நேரடி விதைப்பு செய்துள்ளேன். 60 நாட்களில், கதிர் எடுக்க துவங்கிவிட்டது.ஒரு மாதத்தில் அறுவடைக்கு வந்துவிடும். ஆக மொத்தம், 90 நாளில் அறுவடை செய்து விடலாம். பாரம்பரிய ரகம் அல்லாத பிற ரக நெல்லை போல், குள்ளக்கார் நெல்லை, மூன்று மாதங்களில் அறுவடை செய்யலாம். ஆண்டிற்கு மூன்று பருவமும் பயிரிடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு:80567 66585

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X