தொடரும் மழையால் உழவுப்பணி தீவிரம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தொடரும் மழையால் உழவுப்பணி தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:35

பொள்ளாச்சி:தொடர் மழையால், விவசாயிகள் உழவுப்பணிகளில் தீவிரமடைந்துள்ளனர். கோடை வெயில், சுட்டெரிக்கும் நிலையில், சில பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக, திடீரென மழை பெய்து, வறட்சியில் தவித்த நிலத்தை ஈரமாக்கி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, நிலங்களை உழவு செய்ய துவங்கியுள்ளனர். பொள்ளாச்சி வடக்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில், தற்போது, 60 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. அதனால், விதைப்பு ஏதும் மேற்கொள்ளாமல் உழவு மேற்கொண்டு, மண்ணை இலகுவாக்கி வருகின்றனர்.அடுத்தடுத்து மழை பெய்யும்போது, மழை நீரானது நேரடியாக அடிமண்ணில் இறங்கி, ஈரத்தன்மையை பாதுகாக்கும் போது, சித்திரைப்பட்ட விதைப்பு நடக்கும். பாசன பகுதியில், காய்கறி நாற்று நடவு மேற்கொள்ளப்படும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X