தடுப்பூசியால் பாதுகாப்பாக உணர்கிறோம் : ஊசி போட்டு கொண்ட மக்கள் உற்சாகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2021
10:48
பதிவு செய்த நாள்
ஏப் 20,2021 22:38

'கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், இரண்டாவது அலை வேகமாக பரவினாலும், உயிர் பயம் இன்றி, பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். மக்கள் அனைவரும், தயங்காமல் ஊசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்' என, தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள், உற்சாகமாக தெரிவித்தனர்.இது குறித்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் தெரிவித்த கருத்து:


நம்பகத்தன்மை அதிகரிக்கணும்!
தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது தான். நான் இரண்டு கட்ட தடுப்பூசியும் போட்டுக் கொண்டேன். ஆனால், ஒரு சிலருக்கு ஊசி போட்டுக் கொண்டதும் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, உலக, தேசிய அளவிலான மருத்துவ ஆய்வுக் குழு உள்ளது. அக்குழுவின் அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் நம்பகத் தன்மை அதிகரிக்க வேண்டும்.

வி.ராமாராவ், 79 -

ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.,ஊழியர், நங்கநல்லுார்.பாதுகாப்பானது
தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன்.நான் கொரோனா தடுப்பூசி, இரு முறை போட்டுக் கொண்டேன். தற்போது, நான் மிகவும் உற்சாகமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக உணர்கிறேன். எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. என் மனைவிக்கும், 2வது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளேன்.

எம்.ஜெயக்குமார், 57,

தனியார் நிறுவன ஊழியர்,திருவள்ளூர்.சிறு பாதிப்பும் இல்லை
கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவ சிகிச்சை பெற்றேன். கடந்த மாதம் ஒன்றும், இம்மாதம் ஒன்றும் என, இரண்டு தடுப்பூசிகளை அரசு மருத்துவமனையில் செலுத்திக் கொண்டேன். தடுப்பூசி செலுத்திய பின், காய்ச்சல், உடல்வலி என, எந்த தொந்தரவு இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

கே. தேவேந்திரன், 60

விவசாயி, தேவராஞ்சேரி கிராமம், பொன்னேரி.பயமின்றி இருக்கலாம்
இரண்டு முறை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டேன். தலைவலி, உடல்வலி என, எந்தவொரு தொந்தரவும் ஏற்படவில்லை. சாதாரணமாக சளி தொந்தரவு இருக்கும் எனக்கு, தடுப்பூசி செலுத்திய பின் அதுவும் இல்லை. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

சு. சைலஸ்டி, 51

செவிலியர்,வெள்ளிவாயல்சாவடி, மீஞ்சூர்.பாதிப்பு இல்லை
கவரைப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், மார்ச் மாதம் 12ம் தேதி, கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். அடுத்த வாரத்தில், இரண்டாவது டோஸ் போட இருக்கிறேன். எனக்கு ரத்த அழுத்தம் இருந்த போதிலும், தடுப்பூசியால் எந்த உடல் நிலை பாதிப்பும் ஏற்படவில்லை.

சுமனா கிருஷ்ணமூர்த்தி, 73

கும்மிடிப்பூண்டி.பக்கவிளைவு இல்லை
கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில், மார்ச், 17ம் தேதி, கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து, மனைவியும் போட்டுக் கொண்டார். இருவருக்கும் லேசான உடல் வலி மட்டுமே இருந்தது. அதை தவிர, எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. அடுத்த சில நாட்களில், இரண்டாவது டோஸ் போட இருக்கிறோம்.

க.மோகன், 60,

ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்.ஆரம்பாக்கம்.பாதுகாப்பு உணர்வு
அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றும் நான், சமுதாயத்திற்கு முன்னோடியாக இருக்கவும், சுய பாதுகாப்பு கருதியும், கொரோனா முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொண்டேன். நான் நலமாக இருக்கிறேன். முன்பை விட, தற்போது பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்.

-கே.எஸ்.தமிழரசு, 36,

முதுகலை ஆசிரியர், பொதட்டூர்பேட்டை.ஆரோக்கியம் முக்கியம்
பஸ் நிலையத்தில், குளர்பான கடை நடத்தி வரும் நான், தினசரி ஏராளமான வாடிக்கையாளர்களுடன் பழகி வருகிறேன். சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து வந்தாலும், நானாக முன்வந்து, இரண்டு கட்ட தடுப்பூசிகளை, அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டேன். தற்போது, காலை முதல், இரவு வரை, கடையில் ஆரோக்கியமாக வியாபாரம் மேற்கொண்டு வருகிறேன்.

எம்.பாரத் சிங், 69,

குளிர்பான கடைக்காரர்ஆர்.கே.பேட்டை.நலமாக உள்ளேன்
கடம்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மார்ச், 25ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். வரும் வாரத்தில், இரண்டாவது டோஸ் போட உள்ளேன். விவசாயி ஆகிய நான், எவ்வித பாதிப்பும் இல்லாமல், வழக்கம் போல், வயலுக்கு சென்று பணியை தொடர்ந்து நலமுடன் செய்து வருகிறேன்.

ப. தட்சிணாமூர்த்தி, 64,

விவசாயி,பிஞ்சிவாக்கம் கிராமம், கடம்பத்துார்.பக்க விளைவு இல்லை
பேரம்பாக்கம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த, 16ம் தேதி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். 60 நாட்கள் கழித்து, இரண்டாவது டோஸ் போட வேண்டும். லேசான உடல் வலி மட்டுமே இருந்தது. வேறு எவ்வித பக்க விளைவும் ஏற்படவில்லை.

ஆ. மகாதேவி, 47

பம்ப் ஆப்பரேட்டர்பேரம்பாக்கம்.வழக்கம் போல் செயல்படுகிறோம்
ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில், கடந்த மாதம், 20ம் தேதி, நான் மற்றும் என் மனைவி காஞ்சன்பாய் இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோம். எங்கள் இருவருக்கும், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை உள்ளது. ஊசி போட்டவுடன், எவ்வித பிரச்னையும் இல்லை. வழக்கம் போல், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கான மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறோம்.

பி.கியான்சந்த்ஜெயின், 67

ஊத்துக்கோட்டை.தடுப்பூசி அவசியம்
மார்ச், 24ல், 'கோவாக்கின்' தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இதுவரை, எந்த ஒரு பக்க விளைவும் இல்லை. ஊசி செலுத்திய இடத்தில் மட்டும், லேசாக வலி இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து, சரியாகி விட்டது. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

ஆர். குருவிஷ்வநாத், 40,

தனியார் நிறுவன ஊழியர்,திருவல்லிக்கேணி.பாதிப்பு வராது
!கொரோனா தடுப்பு அலுவலர் என்ற முறையில், இரண்டு முறை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டேன். முதல்முறை, சிறிது உடல் அசதி இருந்தது. காய்ச்சல் வரவில்லை. இரண்டாவது முறை, எந்த பாதிப்பும் இல்லை. தினமும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் எங்களுக்கே, தடுப்பூசியால் எந்த பாதிப்பும் வராததால், எங்களை பார்த்து பொதுமக்களும், ஆர்வமுடன் போட்டுக் கொள்கின்றனர்.

யு.அலமேலு, 45,

உதவி பொறியாளர், சென்னை மாநகராட்சி.அச்சம் தேவையில்லை!
முதல் முறை, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டேன். இரண்டு நாள், காய்ச்சல், உடல் அசதி இருந்தது. பாரசிட்டமால் மாத்திரை சாப்பிட்டதும், அதுவும் சரியாகி விட்டது. ஐந்து நாளில், இரண்டாவது தடுப்பூசி போட வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி தான் தடுப்பு நடவடிக்கையாக இருக்கும். உலகம் முழுதும் தடுப்பூசி போடுவதால், அதில் எழும் அச்சம் தேவையில்லை.

எம்.பாலகிருஷ்ணன், 53,

வேளச்சேரி.


தடுப்பூசி பயனளிக்கும்!
முதல் தடுப்பூசி போட்டேன். ஒரு நாள் மட்டும், காய்ச்சல், அசதி இருந்தது. அடுத்த நாளில் இருந்து, எந்த அச்சமும் இல்லாமல் பணி புரிகிறேன். தடுப்பூசியை, பாதுகாப்பாக உணருகிறேன். முன்பைவிட, மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இரண்டாவது அலை பரவலை தடுக்க, தடுப்பூசி மிகவும் பயனளிக்கும்.

எஸ்.மனோன்மணி, 44,

மாநகராட்சி ஊழியர்தைரியம் வேண்டும்
எனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. அப்படியிருந்தும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 'கோவி ஷீல்ட்' தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதனால், எந்தவித பக்க விளைவும் ஏற்படவில்லை. பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தைரியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

சொ. பரசுராமன், 44,

தனியார் நிறுவன ஊழியர்,படப்பை.பக்கவிளைவு இல்லை
மார்ச், 18ம் தேதி, பம்மல் ஆரம்ப நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஊசி செலுத்திய இடத்தில் மட்டும், இரண்டு நாட்களுக்கு லேசான வலி இருந்தது. வேறு எந்த வித பக்க விளைவும் இல்லை. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

எஸ். மாரியப்பன், 75,

சங்கர் நகர், பம்மல்.தடுப்பூசி அவசியம்
மார்ச், 9ம் தேதி, கிண்டி, கிங் இன்ஸ்டிடியூட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஏற்கனவே, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தடுப்பூசி பயனுள்ளதாக அமைந்துள்ளது. நோய் தொற்றை தடுக்க, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

நா. கண்ணன், 49

,மாநில துணைச் செயலர்,

பசுமை தாயகம்,குரோம்பேட்டை.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X