'மாஸ்க்', சமூக இடைவெளி: பின்பற்றாவிட்டால் அபராதம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:38

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நகராட்சி, வருவாய்துறை, போலீசார் மேற்கொண்ட ஆய்வில், இதுவரை, ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கடைகள் திறக்க தளர்வு அறிவிக்கப்பட்டு வழக்கம் போல செயல்படுகின்றன. வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள், முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பொள்ளாச்சி பகுதியில் வாகனங்களில் பொருட்கள் வாங்க செல்வோர், முதியவர்கள் என, பலரும் முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வதால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில், நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரப்பணி மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர், தொடர் ஆய்வு மேற்கொண்டு, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதலை பின்பற்ற வேண்டும் என கடைகளுக்கு அறிவுறுத்துகின்றனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் பழக்கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள், சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு மொத்தம், மூவாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா தொற்று பரவாமல் இருக்க, முகக்கவசம் அணிவது அவசியம்; வெளியே வரும் போது பொதுமக்கள் இதனை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.ஆனால், சிலர் கொரோனா வைரஸ் பரவல் பற்றி உணராமல் முகக்கவசம் அணியாமல் சுற்றுகின்றனர். இதனையடுத்து, முகக்கவசம் அணியாதவர்கள், கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.நகராட்சி மட்டுமின்றி, வருவாய்துறையினரும், போலீசாரும் அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல், நடப்பாண்டு மார்ச் மாதம் வரை, ஏழு லட்சத்து, 81 ஆயிரத்து, 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஏப்., மாதத்தில் இதுவரை, ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X