பூண்டி ஏரியில் நீர் ஆவியாதல் தடுப்பு புழல், செம்பரம்பாக்கத்திற்கு திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:39

சென்னை : பூண்டி ஏரியில் உள்ள நீர் ஆவியாவதை குறைக்கும் வகையில், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீரை திருப்பும் பணிகள் துவங்கியுள்ளன.



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, கூடுதலாக, தேர்வாய் கண்டிகை ஏரி உருவாக்கப்பட்டு உள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.7 டி.எம்.சி., ஆகும். துவக்கம்தற்போது, 8.65 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அதிகபட்சமாக, புழல் ஏரியில், மூன்று டி.எம்.சி.,யும், செம்பரம்பாக்கத்தில், 2.98 டி.எம்.சி.,யும் இருப்பு உள்ளது. பூண்டியில், 1.46 டி.எம்.சி.,யும், சோழவரத்தில், 0.73, தேர்வாய் கண்டிகையில், 0.46 டி.எம்.சி.,யும் இருப்பு உள்ளது. பூண்டி, சோழவரம், தேர்வாய் கண்டிகை ஏரிகளில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை.



எனவே, இங்குள்ள நீர், புழல் மற்றும் பூண்டி ஏரிகளுக்கு கால்வாய் வழியாக அனுப்பப்படுகிறது. புழல் மற்றும் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில், இந்த நீர் சுத்திகரிக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. கோடை காலம் துவங்கியுள்ளதால், பூண்டி ஏரியில் உள்ள நீர் அதிகளவில் ஆவியாக வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்த நீரை புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திருப்பும் பணிகளை, பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது.கனஅடி நீர் பூண்டியில் இருந்து வினாடிக்கு, 417 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, புழலுக்கு வினாடிக்கு, 130 கனஅடி, செம்பரம்பாக்கத்திற்கு, 150 கனஅடி நீரும் கிடைத்து வருகிறது. சென்னையின் கோடைக்கால குடிநீர் தேவைக்காக, புழலில் இருந்து வினாடிக்கு, 144 கனஅடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து, 178 கனஅடி நீரும் எடுக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X