அரசு புறம்போக்கு நிலங்கள் விற்பனை | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
அரசு புறம்போக்கு நிலங்கள் விற்பனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:39

உத்திரமேரூர் : சடாச்சிவாக்கத்தில், அரசு புறம்போக்கு நிலங்களை பங்கு போட்டு விற்பனை செய்வதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூர் ஊராட்சிக்கு உட்பட்டது சடாச்சிவாக்கம். இக்கிராமத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அருகே, அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் உள்ளன.கால்நடைகளுக்கான மேய்ச்சல் இடமாக இருந்து வந்த இந்த நிலப் பகுதியை, சில மாதங்களாக, அதே பகுதி தனி நபர்கள் சிலர், விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு, எந்த ஆவணமுமின்றி, குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு, மனைகளை பங்கு போட்டு தருவது தெரியவந்துள்ளது.



இது குறித்து, சடாச்சிவாக்கம் நாகபூஷணம் என்பவர் கூறியதாவது:சடாச்சிவாக்கத்தைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை, தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து, வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும்,இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்துள்ள அரசு நிலங்களை மீட்பதோடு, இத்தகைய செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.உத்திரமேரூர் தாசில்தார் ஏகாம்பரம் கூறுகையில், ''சடாச்சிவாக்கத்தில், அரசு புறம்போக்கு நிலங்கள் விற்பனை செய்வதாக வந்த புகார் குறித்து, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் விளக்கம் கேட்க வேண்டி உள்ளது. ''அதை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X