நன்கொடை கணினிகளை பயன்படுத்த இடவசதி இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:42

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார், காந்தி சாலையில், வட்டார முழு நேர கிளை நுாலகம் உள்ளது. இங்கு, 60 ஆயிரம் புத்தகங்கள், 5,000 உறுப்பினர்கள், 52 புரவலர்கள் உள்ளனர்.



தினமும், 250 பேர் வந்து, நாளிதழ் மற்றும் புத்தகங்களை படிக்கின்றனர்.மேற்கூரை இடிந்து விழும் நிலையில் பழமையான கட்டடத்தில் இந்த நுாலகம் இயங்குகிறது. இங்கு, போதுமான இடவசதி இல்லாததால், 50க்கும் மேற்பட்ட மூட்டைகளில், புத்தகங்களை கட்டி, தரையில் போடப்பட்டுள்ளன.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது நுாலகத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து நுாலகங்களுக்கும், சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் சார்பில், கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.



இதில், எட்டு நன்கொடை கணினிகள், ஸ்ரீபெரும்புதுார் நுாலகத்திற்கு, சில நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டன.ஏற்கனவே, புத்தகங்கள் வைப்பதற்கு கூட இடவசதியில்லாத ஸ்ரீபெரும்புதுார் நுாலகத்தில், நன்கொடை கணினிகள் வைத்து பயன்படுத்த, இடவசதி இல்லாததால், கணினிகள் தரையில் அடிக்கி வைக்கப்பட்டுள்ளன.இது குறித்து, வாசகர்கள் கூறியதாவது:நுாலகங்களை நவீனமாக்கவும், நுாலகங்களை பயன்படுத்தும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நுாலக சேவை வழங்கவும், தனியார் நிறுவனம் மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து நுாலகங்களுக்கும், கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.




இந்த கணினிகளில், இணைய சேவை பயன்படுத்தும் வசதியும் உள்ளது. கணினிகளை, ஒரு மணி நேரம் பயன்படுத்த, தனியார் கணினி மையத்தில், 30 ரூபாய் வசூலிக்கும் நிலையில், நுாலகத்தில் உள்ள கணினியை பயன்படுத்த, 10 ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளன. ஆனால், ஸ்ரீபெரும்புதுார் நுாலகத்தில் இடவசதியில்லாததால், கணினிகளை பயன்படுத்த முடியவில்லை. ஸ்ரீபெரும்புதுார் நுாலகத்தை இடித்து, புதிதாக கட்ட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X