மதுரை சினிமா செய்திகள் | சென்னை செய்திகள் | Dinamalar
மதுரை சினிமா செய்திகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:44

தியேட்டர் உரிமையாளர்கள் புது முடிவுகொரோனாவை கட்டுப்படுத்த, நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. இதனால், தியேட்டர்களை முழுவதுமாக மூடப்போவதாக, தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார். இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் நேற்று காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.



கூட்டத்தின் முடிவில், தியேட்டர்களை அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி, தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே, இந்த வாரம் வெளியாக இருந்த படங்கள், தங்களது ரிலீஸை தள்ளி வைத்துள்ளன. இப்படியான சூழலில், சின்ன பட்ஜெட் படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. கோடையை சமாளிக்க ரகுல் 'டிப்ஸ்'கோடையை சமாளிக்க, நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஒரு டிப்ஸ் தந்துள்ளார். சமூக வலைதளத்தில், 'இந்த கோடை வெப்பத்தை எப்படி சமாளிப்பது என யோசித்தேன். பார்லி தண்ணீர் தான், உங்களை காப்பாற்ற வரும். என் நியூட்ரிஷனிஸ்ட் தான், இந்த கூல்டிரிங்கை பரிந்துரை செய்தார். இது, கோடைக்கால துயரங்களில் இருந்து உங்களைக் காக்கும்.



வீக்கம், முகப்பரு, ஜீரண பிரச்னை ஆகியவற்றை இது சமாளிக்கும்' என, பதிவிட்டுள்ளார். விவேக் கனவை நனவாக்கும் ஆத்மிகாமறைந்த நடிகர் விவேக்கின், 'பசுமை இந்தியா' திட்டமான, ஒரு கோடி மரக்கன்று நடும் திட்டத்தை, பொதுமக்கள் உடன் திரையுலகினர் பலரும் முன்னெடுத்து உள்ளனர். நடிகை ஆத்மிகா டுவிட்டரில், 'விவேக்கின் நினைவாக, என் வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம், இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். அவர் விட்டுச் சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தான கனவை, நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்' என, பதிவிட்டு, தான் நட்ட மரக்கன்றுகளின் போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.தயாரிப்பாளரான வில்லன்பில்லா - 2, துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜாம்வால். ஹிந்தியில் ஹீரோவாகவும் நடித்துள்ள இவர், இப்போது தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார்.



'ஆக் ஷன் ஹீரோ பிலிம்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, நண்பருடன் இணைந்து படங்கள் தயாரிக்க உள்ளார். 'சினிமாவில், ௧௦ ஆண்டுகள் என்ற மைல்கல்லை கடந்துவிட்டேன். இந்த தருணத்தில், தயாரிப்பு நிறுவனம் துவங்குவதை உங்களிடம் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன்' என்கிறார் வித்யுத் ஜாம்வால்.தமிழில் மீண்டும் சன்னி லியோன்தமிழில், வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய நடிகை சன்னி லியோன், வீரமாதேவி என்ற சரித்திர படத்தில், நாயகியாக நடித்தார். ஆனால், அந்தப் படம் டிராப் ஆனது. இந்நிலையில், மீண்டும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார். யுவன் இப்படத்தை இயக்குகிறார். யுவன் கூறுகையில், ''வரலாற்று பின்னணியில், ஹாரர் கலந்த காமெடி படமாக தயாராகிறது. சன்னி லியோனுக்கு புது அடையாளம், இப்படம் மூலம் கிடைக்கும். ரசிகர்கள் அவரை கொண்டாடுவர். வித்தியாசமான வேடத்தில், நாயகனாக சதீஷ் நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சென்னை, மும்பையில் படப்பிடிப்பு நடக்கிறது,'' என்றார்.மாலத்தீவு பறந்த காதல் ஜோடிஹிந்தி திரையுலகின் முன்னணி பிரபலங்கள், நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூர்; இருவரும் காதலிக்கின்றனர் என்பது உலகமே அறிந்த செய்தி. படங்களில் பிஸியாக நடித்து வருவதாலும், கொரோனா பிரச்னையாலும், இவர்களின் திருமணம் தள்ளிபோய் உள்ளது. சமீபத்தில், இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இருவரும் உடல் நலம் தேறி, அவர்களது சோதனை, 'நெகட்டிவ்' என வந்ததால், சில நாட்கள் மும்பையில் ஓய்வெடுத்த பின், தற்போது மாலத் தீவிற்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளனர்.இஸ்லாமியர்களை பற்றி பேசும் படம்சிறந்த இயக்குனர், நடிகை உள்ளிட்ட ஏழு சர்வதேச திரைப்பட விருதுகளை வென்ற இன்ஷா அல்லாஹ் படம், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தியேட்டரில் வெளியாக உள்ளது. படத்தின் இயக்குனர் பாண்டியன் பாஸ்கரன் அளித்த பேட்டி: இஸ்லாமியர்களின் வாழ்வியலை படமாக்க நினைத்தேன். இதற்காக, ஒரு மசூதியில் ஆறு மாதம் தங்கி, அவர்களுடனேயே பயணித்தேன். இன்ஷா அல்லாஹ் என்பது, இறைவன் விரும்பினால் என பொருளாகும். மறைந்த தோப்பில் முகம்மது மீரான் மற்றும் பிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதிய சிறுகதையை இணைத்து, இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். நாயகனாக மோக்லி கே.மோகன் நடிக்க, நாயகியாக மேனகா அறிமுகமாகிறார்.இந்தோனேஷியாவில் நடந்த உபுட் சர்வதேச திரைப்பட விழாவில், இப்படத்திற்காக சிறந்த நடிகை விருது பெற்றார். மே 14ல் படம் வெளியாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X