முருகன் கைத்தறி சங்க நிர்வாக குழு கலைப்பா? | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
முருகன் கைத்தறி சங்க நிர்வாக குழு கலைப்பா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:45

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு கைத்தறி சங்க நிர்வாக குழுவை கலைக்க, கைத்தறித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.



காஞ்சிபுரம் காந்தி சாலையில் இயங்கி வருகிறது, முருகன் பட்டு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கம். இதில், ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கைத்தறி மற்றும் கூட்டுறவு துறைகளின் கீழ் இயங்கும் இச்சங்கத்தில், முறைகேடு நடந்ததாக, 2019ம் ஆண்டு, பல புகார்கள் எழுந்தன.இதையடுத்து, முருகன் சங்கத்தில் பணியாற்றி வந்த, கைத்தறித் துறை இணை இயக்குனரான மோகன்குமார், அப்போது பணி இடைநீக்கம் செய்யப் பட்டிருந்தார். இவருடன், மேலும் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.




தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறித் துறை இணை இயக்குனராக பணியாற்றி வந்த செல்வம் என்பவர், அண்ணா, முருகன் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வந்தார்.முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வந்த செல்வம், 2019, ஜூனில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின், அடுத்தகட்ட நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் இருந்தன.இந்நிலையில், கைத்தறி துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில், முறைகேடு நடந்திருப்பதாகவும், முருகன் கூட்டுறவு சங்க நிர்வாக குழுவை கலைக்க, பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



இது சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும், கைத்தறித் துறையினர் எடுத்து வருவதாக தெரிகிறது.இது குறித்து, கைத்தறித் துறை அதிகாரிகளிடம்கேட்டபோது, 'முருகன்கைத்தறி சங்க நிர்வாக குழுவை கலைப்பது பற்றிதற்போது கூற முடியாது. புகார் சம்பந்தமான இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன' என, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X