மப்பேடில் நெற்களமாக மாறிய நெடுஞ்சாலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
22:51

மப்பேடு : மப்பேடு ஊராட்சியில், நெற்களமாகமாறிய நெடுஞ்சாலையால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.



கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது, மப்பேடு ஊராட்சி. இங்கு, 750 ஏக்கரில், பொதுமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள இரண்டு நெற்களங்களும், மிகவும் சேதம்அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.இதனால், பொதுமக்கள் நெல்லை, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், இருபுறமும் தார் சாலையில் போட்டு உலர வைக்கின்றனர்.பின், சாலையோரத்தில் காற்றில் துாற்றி, பிரித்தெடுத்து சேகரிக்கின்றனர். இவ்வாறு, காற்றில் துாற்றும் போது அதிலிருந்து பறக்கும் தவிடு பொடிகள், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.



மேலும், நெல் சாலையில் கிடக்கும் போது, அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து, விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுவதால் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், நெடுஞ்சாலையை நெற்களமாக பயன்படுத்துவதை தடுக்கவும், ஊராட்சி பகுதிகளில் புதிய நெற்களம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி, சாலையை நெற்களமாக பயன்படுத்தக்கூடாது என, மக்களிடம் அறிவுறுத்தி உள்ளோம்.இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X