ரவுடி ஓட ஓட வெட்டி கொலை நீதிமன்றத்தில் இருவர் சரண் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
ரவுடி ஓட ஓட வெட்டி கொலை நீதிமன்றத்தில் இருவர் சரண்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:06

திரு.வி.க.நகர் : மனைவியை ஆபாசமாக பேசியதால் கணவன், அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து, ரவுடியை ஓட ஓட விரட்டி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக, நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.



திரு.வி.க.நகர், கோபாலபுரம், 2வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார், 24; போலீசாரால், 'சி கேட்டகிரி ரவுடி' என அடையாளம் காணப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் இரவு, திரு.வி.க .நகர், 7வது தெரு- ஒத்தவாடை தெரு சந்திப்பில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மூன்று பேர், அவரை ஓட ஓட விரட்டி, அரிவாளால் சரமாறியாக வெட்டி தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திரு.வி.க.நகர் போலீசார், அஜித்குமாரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.



திரு.வி.க.நகர், கோபாலபுரம், 2வது தெருவைச் சேர்ந்த பிரபாகரன், 25, என்பவரின் மனைவி யிடம் ஆபாசமாக பேசி, அவரின் சகோதரரை அஜித்குமார் தாக்கியுள்ளார். இதனால், கோபமடைந்த பிரபாகரன், தன் கூட்டாளிகளுடன் அஜித்குமாரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிரபாகரன், அவரது கூட்டாளி, திரு.வி.க. நகர், காமராஜர் நகரைச் சேர்ந்த திலிப்குமார், 29 ஆகியோர் நேற்று, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X