பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:07

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.



கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனையொட்டி சுற்று வட்டார மக்கள் பலர் நாள்தோறும் பல்வேறு உபயோகங்களுக்காக கள்ளக்குறிச்சி நகருக்கு வந்து செல்கின்றனர்.



இதனால், எப்போது பார்த்தாலும் பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் மற்றும் கூலி வேலைக்கு சென்று வருவோரின் கூட்டமும் அதிகமாக இருக்கும்.பஸ் நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் வெளிப்புறத்தில் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து, கடைகளை விரிவுப்படுத்தி வைத்துள்ளனர்.



இதனால், பயணிகள் பலர் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X