மகிஷாசுரமர்த்தினி கோவிலில் பாலாபிஷேகம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
மகிஷாசுரமர்த்தினி கோவிலில் பாலாபிஷேகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:09

திருத்தணி : திருத்தணி அடுத்த, மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், உச்சிகால பூஜையும், மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு ராகுகால சிறப்பு பூஜையும் நடந்தது.அப்போது, கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X