மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தொடரும் திருட்டு | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தொடரும் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:11

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களில் துப்புதுலங்காமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.



மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கடந்த ஆறுமாதங்களில் ஏழு இடங்களில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.மூங்கில்துறைப்பட்டு மொபைல் போன் கடையில் திருட்டு, பொருவளூர் சாலையில் உள்ள மெடிக்கலில் திருட்டு, அருளம்பாடி, ஈருடையாம்பட்டு வடபொன்பரப்பி, பாக்கம்புதுார் ஆகிய பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருட்டு, புதுார் மற்றும் தொழுவந்தாங்கலில் பசுமாடுகள் திருட்டு என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.திருட்டுபோன இடங்களில் போலீசார் விசாரணை செய்து, திருடர்களை பிடிப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.



இதனால் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் கருதி திருடர்களை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X