மேல்அக்ரஹார தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
மேல்அக்ரஹார தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:11

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மேல்அக்ரஹார தெருவில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடந்தது.



கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட்டுக்கு அருகே உள்ள மேல்அக்ரஹார தெருவில், காய்கறி, மளிகை, பழக்கடை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருந்தனர். இதனால் அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.



இதையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி கமிஷனர் குமரன், ஆக்கிரமிப்புகளை அகற்றிட கடந்த 17 ம் தேதிதெரிவித்தார்.அதன்பேரில், மேல்அக்ரஹாரதெருவில் கடை வைத்திருந்தவர்கள் ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்றி கொண்டனர்.இதனால் அக்ரஹார தெரு விரிவடைந்து காணப்பட்டது.ஆக்கிரமிப்புகள் அகற்றியதை தொடர்ந்து, நகராட்சி சார்பில் துார்ந்து கிடந்த கழிவுநீர் கால்வாயினை சிறிய அளவிலான பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரினர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X