ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு செயல் விளக்கம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு செயல் விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:12

சின்னசேலம் : வேளாண்மை துறை சார்பில் சின்னசேலம் பகுதி விவசாயிகளுக்கு, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பதற்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.



சின்னசேலம் வட்டாரத்தில் உள்ள அம்மையகரம் மற்றும் உலகங்காத்தான் கிராமத்தில் மண் மேலாண்மை மற்றும் பயிர் மேலாண்மைக்காக ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறை பற்றிய செயல் விளக்கம் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட இணை இயக்குநர் ஜெகந்நாதன் முன்னிலை வகித்தார்.



இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க 300 கிலோ தொழு உரத்துடன், சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் நன்றாக கலந்து குவியலாக்கி, அதன்மீது களிமண் பூசி காற்று புகாவண்ணம் நிழலில் வைக்க வேண்டும்.பின்னர் ஒரு மாதம் கழித்து அதனுடன் 15 கிலோ யூரியா கலந்து கடைசி உழவுடன் பயன்படுத்த வேண்டும்.



இதன் மூலமாக நீடித்த நிலையான மகசூல் பெற முடியும். எனவே, அனைத்து விவசாயிகளும் இம்முறையை பயன்படுத்தி, பலன் பெறுமாறு வேளாண்மை துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X