மொபைல் போன் டவருக்கு எதிர்ப்பு; பொதுமக்கள், கலெக்டருக்கு மனு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மொபைல் போன் டவருக்கு எதிர்ப்பு; பொதுமக்கள், கலெக்டருக்கு மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:15

விழுப்புரம் : விழுப்புரம் சாலாமேடு பகுதியில் மொபைல் போன் டவர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



விழுப்புரம் சாலாமேடு, ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்,எங்கள் பகுதியில் உள்ள கிழக்கு சூர்யா நகர், ஆசிரியர் நகர், ஸ்ரீ ராம் நகர், கஸ்துாரி நகர், பழனி ஆண்டவர் நகர், அபிதா கார்டன், துரையரசன் நகர் பகுதிகளில் பொது மக்கள் பலர் வசிக்கின்றனர்.



இங்கு, அரசு அலுவலகங்களும் பல அமைந்துள்ளது.இங்குள்ள பழனி ஆண்டவர் நகர் பகுதியில் மொபைல் போன் டவர் அமைப்பதற்கான முயற்சிநடக்கிறது. இந்த டவர் வந்தால் பொதுமக்களுக்கு நோய்வரக்கூடும். இந்த டவரை இங்கிருந்து, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X