குட்கா கடத்திய இருவர் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
குட்கா கடத்திய இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:16

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே குட்கா பொருட்களை கடத்திய 2 பேரை கைது செய்தனர்.



திருக்கோவிலுார் டி.எஸ்.பி., ராஜூ உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாபு மேற்பார்வையில், மணலுார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் தேவரடியார்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பைக்கை மறித்தும் , நிற்காமல் சென்றவர்களை விரட்டி பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்தனர்.



திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனூரைச் சேர்ந்த ரவி மகன் சரத்குமார், 30; கொள்ளான் மகன் கார்மேகம், 20; என்பதும், திருவண்ணாமலையை சேர்ந்த மொத்த வியாபாரியிடம் இருந்து குட்கா பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு மூங்கில்துறைப்பட்டு வழியாக மணலுார்பேட்டை சென்றது தெரியவந்தது.மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 ஆயிரம் குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X