பெண்ணை மிரட்டிய இரண்டு பேர் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பெண்ணை மிரட்டிய இரண்டு பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:16

விழுப்புரம் : இளம்பெண்ணிடம் தகராறு செய்து தாக்கிய, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.



வானுார் தாலுகா, நாவற்குளத்தை சேர்ந்தவர் விஜயன் மனைவி சுகுணா, 34; இவரது வீட்டின் கதவை, கடந்த 18 ம் தேதி புதுச்சேரி குறிஞ்சி நகரை சேர்ந்த சாந்தசீலன், 23; மாரியப்பன், 21; ஆகியோர் குடிபோதையில் தட்டியுள்ளனர்.இதனால், ஏற்பட்ட தகராறில், சாந்தசீலன், மாரியப்பன் ஆகியோர் சுகுணாவின் வீட்டினுள் புகுந்து பாத்திரங்களை உடைத்தனர். மேலும், சுகுணாவை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து சாந்தசீலன், மாரியப்பனை கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X