தமிழ் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
தமிழ் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:17

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர் சங்க முப்பெரும் விழா நடந்தது.



அம்பேத்கர், பாவேந்தர் பாரதிதாசன்,உலக புத்தக தின விழா ஆகிய முப்பெரும் விழா டி.எம்.பள்ளி வளாகத்தில் நடந்தது. கமலநாதன் தலைமை தாங்கினார். மதியழகன்,இஸ்மாயில், எடிசன், இதாயதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் செம்பின் வரவேற்றார்.அம்பேத்கர் ஒரு சகாப்தம் என்ற தலைப்பில் மாணவி முக்தா ஸ்ரீ, பாவேந்தரின் புதியதோர் உலகம் என்ற தலைப்பில் புதுச்சேரி கலால் உதவி ஆணையர் சண்முக சுந்தரமும் பேசினர்.



தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற திருக்கோவிலுார் தமிழ் சங்கத் தலைவர் சிங்கார உதியன் கவுரவிக்கப்பட்டார்.விழாவில் ஓவியர் கலைச்செழியன், சிவஞான அடிகள்,கல்லை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன்,நெடுமானுார் தமிழ் சங்கத் தலைவர் கதிர்வேல்,சங்கராபுரம் திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி,நல்லாசிரியர் முகமது உசேன்,வள்ளலார் மன்ற பொருளாளர் முத்துக் கருப்பன், சைவ சித்தாந்த பேராசிரியர் ஜம்புலிங்கம், முன்னாள் ரோட்டரி தலைவர் முர்த்தி , ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் பேசினர். தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் ராமசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கீதாமணி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X