திருக்குறள் முன்னணிசெயற்குழு கூட்டம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
திருக்குறள் முன்னணிசெயற்குழு கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:18

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் திருக்குறள் முன்னணி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.



கள்ளக்குறிச்சி திருக்குறள் முன்னணி கழகத்தின் செயற்குழு கூட்டம் ஏ.கே.டி., லாட்ஜ் கூட்ட அரங்கில் நடந்தது. நிறுவனர் பிரகாஷ் தலைமை தாங்கினார். பூசமுத்து, மணிகண்டன், முத்து, மணி, குமார், முத்துவேல், கருணாநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.திருக்குறள் மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு நிர்வாகிகள் சார்பில் செயலாக்க பணிகளை தொடர்ந்து கடைபிடிப்பது, உறுப்பினர்களை ஒருங்கிணைத்து தொடர் சேவைப் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கூட்டத்தில் புதிய தலைவர் கலைவாணன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் தனக்கண்ணு, துணை தலைவர் அம்பேத்கர், துணை செயலாளர் பாக்கியராஜ், இணை தலைவர் மதுரை உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.லோகநாதன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X