மின்னல் தாக்கி எரிந்த மரம்: 13 மணி நேரம் அணையாத தீ | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மின்னல் தாக்கி எரிந்த மரம்: 13 மணி நேரம் அணையாத தீ
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:18

தொண்டாமுத்துார்:கோவை குற்றாலம் அருகே, மின்னல் தாக்கிய பழமையான வாகை மரம், தொடர்ந்து, 13 மணிநேரம் தீப்பிடித்து எரிந்தது.



கோவை மாவட்டம், கோவை குற்றாலம் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. நல்லுார்வயல், சிறுவாணி ரோடு, முத்து மாரியம்மன் கோவில் அருகில், சாலையோரத்தில், நுாற்றாண்டுகளுக்கு மேலான பழமையான, 70 அடி உயர வாகை மரம் உள்ளது.இந்த வாகை மரத்தோடு, ஆலமரமும் பின்னி பிணைந்துள்ளது.



மழையின்போது, வாகை மற்றும் ஆலமரத்தில், மின்னல் தாக்கி தீ பிடித்து எரிந்தது.அப்பகுதி மக்கள், தொண்டாமுத்துார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நள்ளிரவு, 3:00 மணி முதல் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.தொடர்ந்து, மரத்தை வெட்டி, தீயை அணைக்க முடிவு செய்தனர்.



நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, 13 மணி நேர போராட்டத்திற்கு பின், நேற்று மாலை, 3:00 மணிக்கு, கிரேன் உதவியுடன், மரத்தை வெட்டி, தீயை அணைத்தனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X