ஊரடங்கு உத்தரவு: வீதி வீதியாக அறிவிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ஊரடங்கு உத்தரவு: வீதி வீதியாக அறிவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:20

அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில், வீதிவீதியாக ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியானது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 20ம் தேதியில் இருந்து, இரவு 10:00 மணி முதல், அதிகாலை 4:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இத்துடன், ஞாயிறுதோறும், முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தினசரி இரவு 9:00 மணிக்கு, கடை, ஓட்டல் ஆகியவற்றை மூட வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த அறிவிப்புகள் குறித்து, அன்னுார் பேரூராட்சி சார்பில், வாகனத்தில் பிரசாரம் செய்யப்பட்டது. நேற்று, அன்னுார் கடைவீதி, மெயின் ரோடு, அவிநாசி ரோடு, சொக்கம்பாளையம், குமாரபாளையம் உள்பட பேரூராட்சி முழுவதும் ஒலிபெருக்கி வாயிலாக ஊரடங்கு குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது.மேலும், முக கவசம் அணியாவிட்டால், 200 ரூபாய், சமூக இடைவெளி பின்பற்றாவிட்டால், 500 ரூபாய் அபராதம் என, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X