கொரோனா பாதுகாப்பு மையம் அமைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:20

சென்னை : சென்னையில், கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் அமைக்க, தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.



இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் தினசரி, 2,000 முதல், 2,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதன்படி, 12 கொரோனா பரிசோதனை மையங்கள் வாயிலாக பரிசோதனை மேற்கொள்ளப் படுகின்றன. தொற்று பாதித்தவர்களுக்கு, மருத்துவமனை, கொரோனா கவனிப்பு மையம் அல்லது வீட்டில் தனிமைப்படுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு வழியில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. மாநகராட்சியில், 14 கொரோனா கவனிப்பு மையங்கள், 11 ஆயிரம் படுக்கைகளுடன் செயல்படுகின்றன.



இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வீட்டின் அருகிலேயே சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருப்பமுள்ள மற்றும் சிகிச்சை அளிக்க போதிய உட்கட்டமைப்பு வசதியுள்ள, தனியார் மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகளுடன் இணைந்தோ, கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்படும்.அவ்வாறு கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் துவங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள், படுக்கை வசதி, டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விபரங்களுடன், கூடுதல் மாநகர நல அலுவலரை, 94450 26050 என்ற எண்ணில் அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X