செஞ்சி ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதல் அறை அமைக்க கலெக்டர் உத்தரவு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
செஞ்சி ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதல் அறை அமைக்க கலெக்டர் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:21

செஞ்சி : கொரானா பரவல் தீவிரம் அடைந்து வருவாதல் செஞ்சி ஓட்டு எண்ணும் மையத்தில் இரண்டு பிரிவாக ஓட்டு எண்ண மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.



செஞ்சியை அடுத்த காரியமங்கலத்தில் உள்ள செஞ்சி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகின்றனவா, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டனர். இங்கு ஓட்டு எண்ண 14 மேஜைகள் போட ஏற்பாடு செய்திருந்தனர்.



கொரோனா வேகமாக பரவுவாதல் ஓட்டு எண்ணும் இடத்தில் நெரிசலை குறைக்க தற்போது ஏற்பாடு செய்துள்ள அறையில் 8 மேஜைகளும், மற்றொரு ஹாலில் மேலும் 6 மேஜைகள் அமைத்து ஓட்டு எண்ண ஏற்பாடு செய்யும் படி தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜானிடம் கலெக்டர் உத்தரவிட்டார்.ஆய்வின் போது செஞ்சி தொகுதி தி.மு.க.,வேட்பாளர் மஸ்தான், கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து பேசினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X