தனியாருக்கு சாதகமாக அரசு பஸ் நிறுத்தம்? 25 கிராம மக்கள் பரிதவிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தனியாருக்கு சாதகமாக அரசு பஸ் நிறுத்தம்? 25 கிராம மக்கள் பரிதவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:23

அன்னுார்:திருப்பூருக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் 25 கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுார் வட்டாரத்தில் இருந்து தினமும் 1000க்கும் மேற்பட்டோர், அவிநாசி மற்றும் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் திருப்பூருக்கு இயங்கி வந்த அரசு பஸ் திடீரென கடந்த வாரம் நிறுத்தப்பட்டு விட்டது.இதுகுறித்து கஞ்சப்பள்ளி கிராம மக்கள் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில், காலை 8:35 மணிக்கு புறப்பட்டு, அன்னுார், அவிநாசி வழியாக, திருப்பூருக்கு இயங்கி வந்த அரசு பஸ், திடீரென கடந்த வாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், பொகலுார், குருக்கிளையம்பாளையம், ஊத்துப்பாளையம், கஞ்சப்பள்ளி, நரியம்பள்ளி, அல்லப்பாளையம் உள்ளிட்ட 25 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காலை 8:00 மணிக்கும், 8:35 மணிக்கும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தனியார் பஸ் திருப்பூர் செல்கிறது. இடையில் இரண்டு அரசு எக்ஸ்பிரஸ் பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன.எக்ஸ்பிரஸ் பஸ்கள் அன்னுார், கருவலுார், அவிநாசியில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும்; கிராமங்களில் நின்று செல்லாது. காலை நேரத்தில், இரண்டு தனியார் பஸ்களில், பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். கொரோனா தொற்று அச்சத்தால், நெருக்கியடித்தபடி மக்கள் பயணிக்க முடியாது.இந்நிலையில் 8:35 மணிக்கு இயங்கி வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், 25 கிராம மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நிறுத்தப்பட்ட பஸ்ஸை மீண்டும் இயக்க வேண்டும். தனியார் பஸ்களுக்கு சாதகமாக அரசு பஸ் நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.இவ்வாறு, கஞ்சப்பள்ளி மக்கள் தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X