மலைவாழ் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மலைவாழ் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:23

மேட்டுப்பாளையம்:காரமடை வனப்பகுதியில் உள்ள, மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்களின் குழந்தைகளுக்கு, வேளாண் பல்கலை இறுதி ஆண்டு மாணவிகள், கல்வி, சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவிகள், கிராம தங்கல் திட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக, காரமடை பகுதிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாணவிகள் மருதூர், காளம்பாளையம், கெம்மாரம்பாளையம், தேக்கம்பட்டி, ஓடந்துறை, நெல்லித்துறை, சிக்காரம்பாளையம், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஆகிய கிராமங்களில், விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் செயல்முறை பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டனர். காரமடை வட்டாரத்தில் உள்ள மலைவாழ் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு, கல்வி, சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், மாலை நேர கல்வி மையங்களையும் நடத்தி வருகின்றனர்.மொட்டியூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு பற்றியும், ஊக்கையனூர் கிராமத்தில் சத்தான உணவுகள், அதன் முக்கியத்துவம் குறித்தும், நீலாம்பதி கிராமத்தில் குடிநீர், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். அன்சூர், பூமாதேவி நகரில் உள்ள குழந்தைகளுக்கு, கைகளை கழுவும் முறைகள், அதன் நன்மைகள் குறித்து விளக்கினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X