குளத்தை ஆக்கிரமித்த 35 குடிசைகள் அகற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:23

அன்னுார்:அன்னுார் குளத்தை ஆக்கிரமித்த, 35 குடிசைகளை பொதுப்பணித்துறையினர் நேற்று அகற்றினர்.அன்னுாரில், மேட்டுப்பாளையம் ரோட்டில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 119 ஏக்கர் குளம் உள்ளது. இந்த குளத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், 210 குடிசைகள் ஆக்கிரமித்திருந்தன. பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அவற்றை அகற்றினர். அங்கு வசித்து வந்த குடும்பங்களுக்கு, சொக்கம்பாளையம், வடக்கலூர், சாணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், சில ஆண்டுகளாக, மீண்டும் குளத்திலும், குளக்கரையிலும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. கடந்த ஜனவரியில், பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களிடம் இரண்டு மாத அவகாசம் அளித்து, குடிசையை காலி செய்யும்படி கூறினர். மார்ச் மாதம் காலி செய்வதாக ஆக்கிரமிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால், காலி செய்யவில்லை.இதையடுத்து, நேற்று மேட்டுப்பாளையம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பொங்கியண்ணன் தலைமையில், ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, குளத்தில் இருந்த, 25 குடிசைகளையும், குளக்கரையில் இருந்த, 10 குடிசைகளையும் அகற்றினர்.குடிசைகளை அகற்றும்போது, குடியிருந்தவர்கள் தங்களது பொருட்களை எடுத்துச் செல்ல அவகாசம் அளிக்கப்பட்டது. குளத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X