நர்சுகளுக்கு கொரோனா தொற்று; ஆரம்ப சுகாதார நிலையம் மூடல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
நர்சுகளுக்கு கொரோனா தொற்று; ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:23

விழுப்புரம் : இரண்டு நர்சுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விழுப்புரம் அரசு ஆரம்ப சுகாதார மையம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.



விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் தினந்தோறும் கர்ப்பிணிகள்,வெளிப்புற நோயாளிகள், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இங்கு, டாக்டர்கள், செவிலியர்கள் என 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இம்மையத்தில் பணிபுரியும் இரண்டு நர்சுகளுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



இதையடுத்து, நகர்புற சுகாதார மையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 5 நாட்களுக்கு மூடப்பட்டது. மேலும், இங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த மையம் மூலம் இதுவரை 8,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X