செல்லப்பனுார் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
செல்லப்பனுார் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:24

மேட்டுப்பாளையம்:சேறும் சகதியுமாக உள்ள, செல்லப்பனுார் சாலைக்கு, தார் போட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரமடை அடுத்த மருதுார் ஊராட்சியில், கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட, சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இக்குடிநீர் திட்டத்திற்கு சிமென்ட் குழாய்க்கு பதிலாக, இரும்பு குழாய் பதிக்கும் பணிகள் முடிந்தன.செல்லப்பனுார் சாலையில் குழிகள் தோண்டி, குழாய் பதிக்கப்பட்டது. இதனால் இந்த சாலை, மண் சாலையாக மாறியது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால், இவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடிவதில்லை. வாகனங்களில் செல்பவர்கள், வழுக்கி விழுகின்றனர்.இதுகுறித்து மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் கூறுகையில்,"குடிநீர் வடிகால் வாரியம், இந்த சாலையை சீரமைக்க தேவையான நிதியை வழங்கியுள்ளது. காரமடை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், உடனடியாக தார் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.இதுகுறித்து காரமடை பி.டி.ஓ., சைலஜா கூறுகையில்,"செல்லப்பனுார் சாலைக்கு தார் போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன. வரும் திங்கட்கிழமை, தார் சாலை போடும் பணி தொடங்கும்," என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X