திருமண நிதியுதவி திட்ட பயனாளிகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:34

கடலுார் : ஏழைப் பெண்கள் திருமண நிதியுதவி திட்ட பயனாளிகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் நிதியுதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.



ஏழைப் பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டத்தில் தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இதில் பட்டதாரி பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கமும், 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் இத் திட்டத்தில் விண்ணப்பித்து 3 ஆண்டுகள் வரை நிதியுதவி வழங்காமல் இருந்து வந்தது. தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரி 17ம் தேதி தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் அவசர அவசரமாக ஏற்பாடு செய்தனர்.



அதன்படி விண்ணப்பித்து நிலுவையில் இருந்த பயனாளிகள் அனைவருக்கும் அமைச்சர் சம்பத் தங்கம் வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால், பிப்ரவரி 26ம் தேதி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே விண்ணப்பித்த பெண் பயனாளிகளின் மொபைல் போன் எண்ணைக் கொண்டு துறைக்கு தொடர்பு இல்லாத சிலர் பயனாளிகள் வீட்டிற்குச் சென்று வசூல் வேட்டை நடத்தி அதிகாரிகளிடம் வழங்கினர்.



அதில், பணம் கொடுத்த பயனாளிகளுக்கு முறையாக வங்கிக் கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் வரவு ஆனது. பணம் கொடுக்காத பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை.அக்கம் பக்கத்தில் விசாரித்த பயனாளிகள், நேரடியாக சமூக நலத்துறை அதிகாரிகளிடம் சென்று கேட்டனர். அதற்கு அவர்கள் வங்கியின் ஐ.எப்.எஸ்.சி., கோட் சரியில்லை இதனால், பணம் திரும்பி வந்துவிட்டது.



தேர்தல் முடிந்து வாருங்கள் பார்க்கலாம் என அலட்சியமாக பதில் கூறி அனுப்பினர்.ஆனால், இதுவரை பயனாளிகளுக்கு தங்கக்காசு கொடுத்ததோடு சரி. பணம் வங்கிக் கணக்கில் சேரவில்லை என நடையாய் நடந்து வருகின்றனர்.பாதிக்கப்பட்டுள்ள 140க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலெக்டரிடம் முறையிட்டு வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X