சேதமடைந்த பிரதான சாலை விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் | சென்னை செய்திகள் | Dinamalar
சேதமடைந்த பிரதான சாலை விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:34

ஆவடி : ஆவடியில், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் உள்ளனர்.ஆவடியில் இருந்து கோவர்த்தினகிரி வழியாக பூந்தமல்லிக்கு செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.



இந்த சாலையோரத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், மழை நீர் வடிகால் பணி நடக்கிறது.மேலும், பொதுப்பணித்துறை சார்பில், இந்த சாலையோரத்தில், பருத்திப்பட்டு ஏரி உபரி நீர் கால்வாய் பணி துவங்கப்பட்டு, ஆரம்ப நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டது.எந்த மழை நீர் வடிகால் பணிகளும் நிறைவடையாததால், கடந்த மழையின் போது, தண்ணீர் வடிந்து செல்ல, சாலையின் குறுக்கே சிறு பள்ளம் தோண்டப்பட்டது.அந்த பள்ளம், தற்போது, நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு நிலைய சாலை சந்திப்பில், பெரிய பள்ளமாக மாறி வருகிறது.இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி, விபத்து அபாயத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X