ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:36

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா விதிமுறைகள் குறித்து, அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.நிகழ்ச்சியில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:இரவு, 10:00 மணி முதல் விடியற்காலை, 4:00 மணி வரை எந்த வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. கோவில் திருவிழா நடத்த அனுமதி இல்லை.திருமணத்தில் 100 நபர்களும்; துக்க நிகழ்வுகளில், 50 நபர்கள் மட்டுமே பங்கேற்கலாம். இரவில் மருத்துவமனை, ரயில், விமான நிலையங்களுக்கு செல்ல, உரிய ஆவணங்களை காண்பிப்பது கட்டாயம். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தினத்தில், உணவு விடுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில், பார்சல்கள் மட்டுமே வழங்க வேண்டும். ஊரடங்கு விதிமுறைகளை, பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தாசில்தார் சாந்தாமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சிவகுமார், தவமணி, நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X