ஆவடியில் 3 நாளில் 72 தெருக்களில் கொரோனா பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:36

ஆவடி, : ஆவடியில், மூன்று நாட்களில் புதிதாக, 72 தெருக்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல், வெளியே சுற்ற வேண்டாம் என, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



சென்னை புறநகரில், 65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஆவடி மாநகராட்சியில், 4 லட்சத்து 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 16ம் தேதி நிலவரப்படி, 452 பேர் கொரோனா தொற்றின், இரண்டாம் அலையில் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.அப்போது, 219 தெருக்களில் கொரனா வைரஸ் தொற்று பரவி இருந்தது; 9 இடங்களை தனிமைப்படுத்தி, அதிகாரிகள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இருந்தனர்.மாநகராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 2,656 தெருக்களில் இதுவரை 2,441 தெருக்களுக்கு கொரோனா பரவல் இல்லாமல் இருந்தது. அன்றைய நிலவரப்படி, 14,212 பேர் கொரோனா தடுப்பூசி போட்டனர்.



இந்நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி போட அதிகளவு ஆர்வம் காட்டினர்.இதனால் மூன்றே நாட்களில் 2,000 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதே நேரத்தில், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டோரும் அதிகளவு கண்டறியப்பட்டு வருகின்றனர்.ஆவடி மாநகராட்சி பகுதியில், 16ம் தேதியில் இருந்து மூன்றே நாட்களில், 72 தெருக்களில் புதிதாக கொரோனா பரவி இருப்பது, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.நேற்று முன்தின நிலவரப்படி, ஆவடியில் மொத்தம், 291 தெருக்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 23 இடங்கள் பொதுமக்கள் நடமாட தடைசெய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 509 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை ஆவடி மாநகராட்சி பகுதியில் 8,062 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 174 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால், பொதுமக்கள் தேவையில்லாமல் பொது இடங்களில் சுற்றித்திரிய வேண்டாம் என, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X