மினி பஸ் இயக்க கோரிக்கை | கடலூர் செய்திகள் | Dinamalar
மினி பஸ் இயக்க கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:36

மந்தாரக்குப்பம் : நெய்வேலி, மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா லிமிடெட் தலைமை அலுவலகம், அனல்மின் நிலையம், சுரங்கங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு வெளி மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் தங்கி பணிபுரிகின்றனர்.



ஆனால், மந்தாரக்குப்பம் பகுதியில் இருந்து அருகில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப், அரசக்குழி, திடீர்குப்பம், இந்திரா நகர், முத்தாண்டிகுப்பம், உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம், என்.எல்.சி., சார்பில் மிகக் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பல மணிநேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலம் உள்ளது.எனவே இந்த வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X