சிறுமியிடம் அத்துமீறல் இருவருக்கு 'போக்சோ' | சென்னை செய்திகள் | Dinamalar
சிறுமியிடம் அத்துமீறல் இருவருக்கு 'போக்சோ'
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:37

அண்ணா நகர் : அரும்பாக்கத்தைச் சேர்ந்த, சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இருவரை, போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.



அரும்பாக்கத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி காணாமல் போனதை தொடர்ந்து, அவரது பெற்றோர் அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி, 26, என்பவர், ஆசை வார்த்தை கூறி சிறுமியை, அழைத்து சென்றது தெரிந்தது.நேற்று, கோயம்பேடு பகுதியில் சுற்றி திரிந்த இருவரையும் மடக்கி பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.



விசாரணையில், சிறுமியின் உறவினர் மகன், செந்தில், 37, என்பவர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பதும், இதையடுத்து, பசுபதி என்பவர், ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.இதையடுத்து, இருவரையும், போக்சோவில் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X