பாறை இடுக்கில் சிக்கி காட்டுமாடு பலி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பாறை இடுக்கில் சிக்கி காட்டுமாடு பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:37

மேட்டுப்பாளையம்:காரமடை வனப்பகுதியில் பாறை இடுக்கில் சிக்கிய காட்டுமாடு பரிதாபமாக இறந்தது.காரமடை வனச்சரகம், மாணவர் பிரிவு நீராடி வனப்பகுதியில், வனக்காப்பாளர் சண்முகவேல், வனக்காவலர் நடராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாறை இடுக்கில் சிக்கிய ஒரு காட்டுமாடு இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தனர். கோவை உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், வனத்துறை கால்நடை டாக்டர் சுகுமார், வனச்சரக அலுவலர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.'காட்டு மாட்டின் வயது 15 ஆண்டுகள் இருக்கலாம். ஓடி வருகையில், பாறை இடுக்கில், அதன் கால் சிக்கியிருக்க வேண்டும். காலை வெளியே எடுக்க முடியாமல், காட்டு மாடு இறந்துள்ளது' என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், மேலும் உடற்கூராய்வுக்காக, உள் உறுப்புகளின் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. பின், காட்டு மாட்டின் சடலத்தை, வனத்திலுள்ள ஊன் உண்ணிகளுக்கு இரையாக, திறந்தவெளியில் வனத்துறையினர் போட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X