கொரோனா பரவலை தடுக்க | சென்னை செய்திகள் | Dinamalar
கொரோனா பரவலை தடுக்க
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:38

சென்னை : ''சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க வேண்டும்,'' என, கூடுதல் தலைமை செயலர் ஹர்மந்தர் சிங் பேசினார்.



சென்னையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் ஹர்மந்தர் சிங் தலைமையில், காணொலி வாயிலாக நேற்று நடந்தது.அப்போது, ஹர்மந்தர் சிங் பேசியதாவது: சென்னையில் அனைத்து பகுதிகளிலும், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.வார்டுக்கு, தினமும் இரண்டு இடங்களில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வது குறித்து, கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணிகள், துண்டு பிரசுரங்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பொதுமக்கள் முககவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.



தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X