பத்திரப்பதிவில் 'பத்திரம்': சுகாதாரத்துறை 'அட்வைஸ்' | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பத்திரப்பதிவில் 'பத்திரம்': சுகாதாரத்துறை 'அட்வைஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:39

அவிநாசி:அவிநாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில், தினமும் ஏராளமானோர் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக கூடுகின்றனர்.குறிப்பாக, முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வோரின் எண்ணிக்கை, இரு மடங்காகிறது. பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியிருக்கிறது.இட நெருக்கடி நிறைந்த இந்த அலுவலகத்தில், ஒரே சமயத்தில் ஏராளமானோர் கூடுவதால், சமூக இடைவெளிக்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தொற்று பரவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:தொற்றுப்பரவல் அச்சுறுத்தினாலும், பொதுமக்களுக்கு வீடு, நிலம் வாங்குவதில் ஆர்வம் குறைந்தபாடில்லை.சொத்து வாங்குவதும் முக்கியம்; அதைவிட உயிரை காப்பதும் மிக முக்கியம். எனவே, பத்திரப்பதிவின் போது, கவனமாக இருக்க வேண்டும். தொற்றுப் பரவலுக்கு காரணமாகி விடக்கூடாது. முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதை பத்திரப்பதிவு அலுவலக அதிகாரியும் நிர்வாகத்தினரும் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X