பேருந்துகள் நிறுத்தம் பயணியர் பரிதவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:39

செங்குன்றம் : ஊரடங்கு காரணமாக, ௮:௦௦ மணிக்கு, மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும், அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து வசதியின்றி, பயணியர் பரிதவித்தனர்.



கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த, நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.அதனால், சென்னை நகருக்குள் இயங்கும் மாநகர பேருந்துகள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளுக்கு இயங்கும் அரசு பேருந்துகள், இரவு, 8:00 மணியுடன், அந்தந்த பேருந்து நிலையம் மற்றும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன.சென்னை சுற்றுவட்டாரங்களில் பணி முடிந்தும், வெளியூர்களில் இருந்தும் வீடு திரும்புவோர், 7:00 மணி அளவில் பேருந்துகளில் பயணித்து, இரவு, 8:30 மணிக்கு பின், செங்குன்றத்திற்கு வந்து சேர்ந்தனர்.அங்கிருந்து, சுற்றுவட்டார கிராமங்களுக்கும், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கும் செல்வோர், பேருந்து வசதியின்றி பரிதவித்தனர்.



ஆட்டோக்களில் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.அதிலும், 5 அல்லது 6 கி.மீ., துார பகுதிகளுக்கு மட்டுமே, பயணியரை அழைத்து செல்ல முன் வந்தனர்.நீண்ட துார பயணத்திற்கு மறுத்துவிட்டனர். அதற்கு காரணம், காலதாமதம் போன்ற பிரச்னைகளால், 10:௦௦ மணிக்கு மேல் பயணிக்க நேர்ந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சம் தான்.இதே நிலை தான், மாதவரம், அம்பத்துார், ஆவடி, திருவேற்காடு பகுதிகளில் ஏற்பட்டது.போக்குவரத்து வசதி யின்றி தவித்தவர்கள் கூறியதாவது:பெரும்பாலானோர், மாநகர பேருந்துகளையே நம்பி உள்ளனர். இந்நிலையில், 8:00 மணிக்கே, மாநகர போக்குவரத்தை நிறுத்தியதால், எங்களை போன்றோர், எப்படி வீடுகளுக்கு போவது. மாநகர பேருந்துகளை, 9:00 மணி வரையாவது இயக்க, அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X