ஓட்டு எண்ணும் மையத்தில் வாகனங்களுக்கு தடை கோரி மனு | சென்னை செய்திகள் | Dinamalar
ஓட்டு எண்ணும் மையத்தில் வாகனங்களுக்கு தடை கோரி மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:40

ஆர்.கே.நகர் : -ஓட்டு எண்ணும் மையங்களில், வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, வடக்கு மண்டல தேர்தல் துணை ஆணையரிடம், தி.மு.க., வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர்.



ஆர்.கே.நகர் மற்றும் ராயபுரம் தொகுதிகளின் ஓட்டு எண்ணும் இயந்திரங்கள், ராணிமேரி கல்லுாரியில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தற்போது உள்ள பாதுகாப்பை, மேலும் அதிகப்படுத்த வேண்டி, ஆர்.கே.நகர், ராயபுரம் தொகுதி, தி.மு.க., வேட்பாளர்கள், வடக்கு மண்டல தேர்தல் துணை ஆணையர் ஆகாஷிடம் மனு அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஓட்டு எண்ணும் ராணிமேரி கல்லுாரியின் உள்ளே, கார், வேன், ஆட்டோ, கன்டெய்னர் லாரி உள்ளிட்டவற்றை அனுமதிக்க கூடாது.



அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டால், எங்களுடைய முகவரிடம் தெரிவிக்க வேண்டும். வாகனத்தை பார்வையிட அனுமதி அளிக்க வேண்டும்.காவல் துறை வாகனங்களை கல்லுாரிக்குள் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தாலும், ஓட்டு இயந்திரம் உள்ள கட்டடங்களில் இருந்து, 200 மீட்டர் துாரத்திற்கு அப்பால் நிறுத்த வேண்டும்.கல்லுாரியின் உள்ளே, 'வைபை' இணைப்பை துண்டிக்க வேண்டுகிறோம்.ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, கல்லுாரிக்குள் ஆன்லைன் வகுப்பு, பயிற்சி வகுப்பு உள்ளிட்ட வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டுகிறோம்.ஓட்டு எண்ணும் மையமான, ராணிமேரி கல்லுாரி வளாகத்தில், எங்களது கண்காணிப்பு முகவர்களுக்கு சந்தேகம் எழும்போது, வளாகம் முழுதும் சுற்றி பார்க்க அனுமதிக்க வேண்டுகிறோம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X