மாடம்பாக்கம் ஏரி கால்வாய் சீரமைக்கப்படுமா? | சென்னை செய்திகள் | Dinamalar
மாடம்பாக்கம் ஏரி கால்வாய் சீரமைக்கப்படுமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:40

தாம்பரம் : சென்னை புறநகரில் உள்ள, மாடம்பாக்கம் ஏரி, உபரி நீர் கால்வாய் சீரமைக்கப்படாததுடன், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.தாம்பரம் அருகே உள்ளது, மாடம்பாக்கம் பேரூராட்சி. இங்கு, பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில், 250 ஏக்கர் பரப்பில், பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரி, மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, நுாத்தஞ்சேரி ஆகிய பகுதிகளின், நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதை நம்பி, 650 ஏக்கர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்கள், பாசன வசதி பெற்றன. தற்போது, 400 ஏக்கருக்கும் குறைவாக, இவை சுருங்கிவிட்டன.அனுமதி இல்லைகடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேல், ஏரி துார் வாரப்படாத நிலையில், 2018 ஜூன், 3ம் தேதி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை குழுவினர், சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.அவர்களை, 'மாடம்பாக்கம்- - சிட்லபாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பணி துவங்க உள்ளது' எனக்கூறி, பொதுப்பணித் துறை அதிகாரிகள், பணி செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.தொடர்ந்து, 2019 ஏப்ரலில், அரசு உத்தரவின்படி, இந்த ஏரிக்குள் மண் எடுக்கும் பணிகள் நடந்தன. அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட, மண் எடுக்கப்பட்டதுடன், ஏரியின் ஒருபுறம் மட்டும் கரைகள் சீரமைக்கப்பட்டன.மறுபுறம் சேதமடைந்திருந்த கரைகள், மதகுகள் சீரமைக்கப்படவில்லை.அப்பகுதியைச் சேர்ந்த, விவசாயி, பி. தீனதயாளன், 44, கூறியதாவது:ஏரியில் வடக்கு திசையில், ராஜம்மாள் நகர் பூங்கா பின்புறம் உட்பட, நான்கு இடங்களில் உள்ள, மதகுகள் சேதமடைந்துள்ளன; அங்குள்ள, கலங்கல் பகுதியும், உயர்த்தி அமைக்கப்படவில்லை.தீர்வுபொதுப் பணித்துறை அதிகாரிகள், ஏரிக்குள் மண் எடுக்கும் பணிகளை செய்தபோதே, சேதமடைந்திருந்த கரைகளை சீரமைக்க கோரினோம்; அவர்கள், எந்த பணிகளையும் ஒழுங்காக செய்யாமல், மண்ணை அள்ளி விற்று, கொள்ளை லாபம் பார்ப்பதிலேயே குறியாக செயல்பட்டனர்.இதனால், 2019 - 2020 என, இரண்டு ஆண்டு களில், நல்ல மழை பொழிவு இருந்து, ஏரி நிரம்பியும், விவசாயத்திற்கான தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், சேதமடைந்துள்ள மதகுகள் வழியாக, நீர் வீணாக வெளியேறி வருகிறது.பல தரப்பில் இருந்து, கோரிக்கை விடுக்கப்பட்டும், இன்று வரை, மதகுகள் மற்றும் கலங்கல் சீரமைக்கப்படவில்லை.கலங்கல் பகுதியில் இருந்து, தண்ணீர் வெளியேறும் கால்வாயை ஆக்கிரமித்தும் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதை அறிந்தும், பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.அரசு தலையிட்டு, பருவ மழை துவங்கும் முன், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X